Latest News

அஜீத் ரசிகர்களுக்கு அல்வா கொடுக்கும் தயாரிப்பாளர்


இது ஏமாத்துற அல்வா இல்லை பாஸ், அஜீத் ரசிகர்களுக்கு திகட்டத் திகட்ட தித்திக்கிற அல்வா. அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் என்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மூச்சுகூட வெளியே போகக்கூடாது என்பார்கள். ஆனாலும், அதையும் மீறி பல விஷயங்கள் வெளியே வந்து விழுவது வழக்கம்தான். ஆனால், அஜீத்தின் ‘விவேகம்’ படத்தைத் தயாரித்து வரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன், ‘ரசிகர்கள் ரொம்ப நாளா வெயிட் பண்றாங்க. நல்ல ஸ்டில் ஒண்ணை ரிலீஸ் பண்ணுங்க’ என்றாராம். அதனால்தான், சில தினங்களுக்கு முன்பு அசத்தலான அஜீத் ஸ்டில் ஒன்றை தன்னுடைய ட்விட்டரில் வெளியிட்டார் இயக்குநர் சிவா. இது ஒன்று மட்டுமல்ல, குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது ஸ்டில்களை இறக்கி ரசிகர்களை குஷிப்படுத்தப் போகிறார்களாம்.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.