Latest News

புது தோற்றத்தில் அஜீத்


‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துவரும் படம் ‘விவேகம்’. காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று அஜீத்தின் புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிவா. ‘சாய்… சாய்…’ என்ற வார்த்தைகளுடன் அவர் வெளியிட்டிருக்கும் அந்தப் புகைப்படத்தில், ரொம்ப யங்காகக் காட்சியளிக்கிறார் அஜீத். கையில் தற்காப்புக்கலை ஆயுதத்துடன் அவர் கொடுக்கும் போஸ், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்டது போல் உள்ளது. ஏற்கெனவே, சிக்ஸ் பேக் உடன் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மிகப்பெரிய வைரலானது போல், இந்தப் படமும் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.