Latest News

நல்ல நாள் பார்க்கும் விஜய் சேதுபதி

ஈகோ பார்க்கும் நடிகர்களுக்கு மத்தியில், சின்ன ஹீரோ – பெரிய ஹீரோ என்ற அந்தஸ்து பார்க்காமல் அனைவருடனும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் இறங்கி அடிப்பது விஜய் சேதுபதியின் பாலிஸி. அப்படித்தான், கெளதம் கார்த்திக்குடன் ஒரு படத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. ஆறுமுக குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு, ‘நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். விஜய் சேதுபதி ஜோடியாக, அக்கட தேசத்தில் இருந்து நிகாரிகா கொனிடேலா அறிமுகமாகிறார். விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘ஆரஞ்ச் மிட்டாய்’ படங்களுக்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன், இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

aruns MALAR TV english Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.