ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளப் படம் பாகுபலி-2. இந்தப் படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.
இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சத்யராஜ் காவிரி விவகாரத்தில், கன்னடர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. #வாட்டாள்_நாகராஜ் குறிப்பாக, அவர் மன்னிப்பு கேட்காவிடின், படத்தை வெளியிட முடியாது என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, கன்னட அமைப்பினருடன், நேற்று இயக்குநர் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சத்யராஜ் மன்னிப்பு கேடட்டால்தான் படத்தை வெளியிட முடியும் என்று கன்னட அமைப்பினர் தெரிவித்து விட்டனர். இதனால், படத்தின் கர்நாடக உரிமை இதுவரை விற்கப்படாமலேயே உள்ளன.
இந்நிலையில், "சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிடின், படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். வருகின்ற 28-ம் தேதி பெங்களூருவில் முழு அடைப்பு நடத்தப்படும். ராணுவமே வந்தாலும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என்று கன்னட அமைப்புகளில் தலைவர் வாட்டாள் நாகராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, "இந்தப் படத்தில் நடித்ததைத் தவிர வேறு எந்த தவறையும் செய்யவில்லை. இந்தப் படம் வெளியாகவில்லை என்றால், சத்யராஜிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. படம் வெளியாகவிடின், எங்களுக்குத்தான் பிரச்னை" என்று ராஜமெளலி கூறியுள்ளார்.