சற்றுமுன்

அமலா பாலின் ‘மின்மினி’

‘முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், அமலா பால் ஹீரோயினாகவும் நடிக்கின்றனர். க்ரைம் டிராமாவான இந்தப் படத்தில், போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அமலா பால், ஸ்கூல் டீச்சராக நடிக்கிறார். இதுவரை பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி வந்தவர்கள், தற்போது ‘மின்மினி’ எனப் பெயர் சூட்டியுள்ளனர். பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதால், படத்துக்கு இந்தப் பெயரை வைத்தார்களாம். டீச்சரான அமலா பாலுக்கும், மாணவர்களுக்குமான பிணைப்பாக இந்த தலைப்பு இருக்கும். கடந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போதுவரை 80 சதவீத படப்பிடிப்பை முடித்துவிட்டார்களாம். படத்தில், கதையோடு பயணிக்கும் ஒரே ஒரு மாண்டேஜ் சாங் மட்டும் இருக்கிறது. விரைவில் ‘மின்மினி’யின் டீஸரை எதிர்பார்க்கலாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.