நயன்தாராவைப் போலவே, நாயகன் இல்லாமல் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் த்ரிஷா. சுந்தர் பாலு இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘கர்ஜனை’ படமும் அப்படிப்பட்டதுதான். பல்வேறு உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து படமாக்கியிருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். கதைப்படி, மது என்ற மேற்கத்திய நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் த்ரிஷா.
ஒரு நிகழ்ச்சிக்காக கொடைக்கானல் செல்லும் அவர், ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதை. இந்தக் கதையில் த்ரிஷாவுக்கு ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருக்கிறதாம். இதற்காக சண்டை போட்டு ரோட்டில் நிஜமாகவே உருண்டுள்ளார் த்ரிஷா. டூப் இல்லாமல் ரியலாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடாம்.