வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘வடசென்னை’ படம்தான், தனுஷ் இதுவரை நடித்ததிலேயே அதிக பட்ஜெட் படம் என்கிறார்கள். அப்படி என்ன செலவு செய்துவிட்டார்கள் என்று கேட்கிறீர்களா? ‘விசாரணை’ படத்தின் ஒட்டுமொத்த செலவும், ‘வடசென்னை’ படத்தின் ஒரு ஷெட்யூலுக்குத்தான் வந்ததாம்.
அப்படியானால், மொத்த பட்ஜெட் என்ன என்பதை கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். இதில், மூன்று பாகங்களாக வேறு உருவாக இருக்கிறது இந்தப் படம். தனுஷின் ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. சமுத்திரக்கனி, அமலா பால், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.