சற்றுமுன்

ரஜினியால் அவதிப்படும் விஜய், சூர்யா

தனது படங்களை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்தால், அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கும் வழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர் ரஜினி. ‘வேலியில் போகிற ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொண்ட கதை’யாக, அந்தச் செயலால் ரஜினி அதிகம் கஷ்டப்பட்டது பெரும் கதை. ரஜினியின் இந்தச் செயலால், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் இருக்கிறது.

உதாரணத்துக்கு, ‘பைரவா’ படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், ‘சி3’ படத்தினால் 10 கோடி ரூபாய் நஷ்டம் என்று கூறப்படுகிறது. ‘போகன்’ படத்தால் 6 கோடி நஷ்டம் என ஒவ்வொரு படமாக பட்டியல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் நஷ்டத்தை திருப்பிக் கொடுத்தால் மட்டுமே அவர்களுடைய அடுத்த படத்தை வாங்கி வெளியிடுவது என்ற முடிவில் இருக்கிறார்களாம் விநியோகஸ்தர்கள்.

சில நடிகர்களுக்கு ‘ரெட் கார்டு’ போடுவது என்று கூட சில நாட்களுக்கு முன்பு முடிவெடுத்தனர். ஆனால், அதைச் செயல்படுத்துவதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்களாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.