சற்றுமுன்

   விஜய் இப்போ ஹேப்பி அண்ணாச்சி

                 
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் பெயரிடப்படாத படத்தின் மூன்றாவது ஷெட்யூல், ராஜஸ்தானில் நடந்து முடிந்துவிட்டது. இதனால், ஒட்டுமொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் திளைக்கிறது. காரணம், கொளுத்துகிற வெயிலில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களிலேயே வெக்கை நிலவுகிறது. இந்நிலையில், தகிக்கும் ராஜஸ்தானில் ஷூட்டிங் செய்தால்..? உண்மையிலேயே ஒட்டுமொத்த படக்குழுவும் கஷ்டப்பட்டுதான் போனதாம். நித்யா மேனனுடனான பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளை அங்கு எடுத்திருக்கிறார் அட்லீ. அடுத்ததாக, சென்னையிலேயே ஷூட்டிங் நடைபெற உள்ளது. இதில், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் சம்பந்தப்பட்டக் காட்சிகள் இருக்குமாம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.