நடிகர் சங்கத்தின் செயலாளர், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என ஒரே நேரத்தில் இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வருகிறார் விஷால். நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது, திருட்டு விசிடியை ஒழிப்பது என இரவு - பகல் பாராமல் பாடுபட்டு வரும் அவர், அவ்வப்போது படங்களிலும் நடிக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’, மித்ரன் இயக்கத்தில் ‘இரும்புத்திரை’ படங்களில் நடித்துவரும் விஷால், அடுத்து பிரபுதேவா இயக்கத்தில் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’, வெங்கடேசன் இயக்கத்தில் ‘நாளை நமதே’ படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும், ‘வில்லன்’ என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாகவும் நடிக்க உள்ளார். இரண்டு சங்கங்களின் பிரச்னைகளைத் தீர்க்கவே அவருக்கு நேரம் போதவில்லை. இதில், இந்தப் படங்களை எப்போது முடித்துக் கொடுப்பார் என்று கவலையுடன் காத்திருக்கிறார் லிங்குசாமி. காரணம், ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகத் திட்டமிட்டு வந்த லிங்குசாமி, இப்போதாவது விடிவுகாலம் பிறக்குமா என்று காத்திருக்கிறார்.
summary :'Chandakohi', is waiting for the time to come. Vishal is riding the twin horse simultaneously as the secretary of the Acting Association and the Producer Union. He is playing a villain in 'Villain' and a villain in the movie 'Villain'