சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன் நடிக்கும் படம் ‘சங்கமித்ரா’. ‘பாகுபலி’யைப் போல் மிகப்பெரும் வரலாற்றுக் காவியமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பிரமாண்டமாக இந்தப் படத்தைத் தயாரிக்கிறது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம்.
இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதோடு சரி. அதன்பிறகு எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஒளிப்பதிவாளர் மாறியது, ஸ்ருதி சண்டை கற்றது என ஒன்றிரண்டு விஷயங்களே நடந்தன. இந்நிலையில், புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில், ‘சங்கமித்ரா’வின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.
சுந்தர்.சி, ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதி ஹாசன், தயாரிப்பாளர் முரளி, கலை இயக்குநர் சாபு சிரில் ஆகியோர், கேன்ஸ் திரைப்பட விழாவின் ரெட் கார்ப்பெட்டில் நடக்க இருக்கிறார்கள். இந்த விழா, வருகிற 17ஆம் தேதி தொடங்கி, 28ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது.
Summary: F.irst Look at Sundar C film at Cannes Film Festival Arya, Jayam Ravi and Shruti Haasan will be seen in 'Sundar'. The film is being created as a great historical epic, like 'Pakubali'. In the budget of Rs 300 crore, the film is produced by Sri Deanthal Films