நாகசைதன்யா, தமன்னா நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘100 பர்சண்டேஜ் லவ்’. சுகுமார் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இந்தப் படத்தை, தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்கள். ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் நடிப்பதுடன், இசையையும் அவரே கவனித்துக் கொள்கிறார். தெலுங்குப் படத்தை எடுத்த சுகுமார், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார் என்பது கூடுதல் விஷயம். முழுக்க முழுக்க லண்டனில் தான் கதை நிகழ்வதால், ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் அங்கேயே நடைபெறுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும், ஷூட்டிங்குக்காக லண்டன் கிளம்புகின்றனர்.
Summar: Nagasaitanaya, Tamanna's latest release in 2011 is the Telugu film '100 Percentage Love'. Sukumar had directed this movie. This film is going to be remade in Tamil. GV Prakash is the hero and the music is taken care of. Sukumar, who has taken the Telugu film, is producing this film. The whole story takes place in London, and the entire shooting takes place there