சற்றுமுன்

கெஸ்ட் ரோல் என்றவுடன் குமுறும் நடிகை

‘அட்டகத்தி’ மூலம் தமிழில் அறிமுகமானவர் நந்திதா. பிறந்தது பெங்களூர் என்றாலும், கலையான தமிழ் கிராமத்து முகம் அவருக்கு. அதனால் தான், தொடர்ந்து அந்த மாதிரி வேடங்களே அவருக்கு கிடைத்து வருகின்றன. தினேஷ் ஜோடியாக அவர் நடித்த ‘உள்குத்து’, அடுத்த வாரம் ரிலீஸ். இந்தப் படத்தில், ரவுடியான பால சரவணனுக்கு தங்கையாக நடித்திருக்கிறார். இதுகுறித்துப் பேசியவரிடம், கெஸ்ட் ரோலில் நடிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. “என்னை ‘புலி’ படத்தில் நடிக்க அழைத்தபோது, நிறைய காட்சிகள் இருப்பதாகக் கூறினர். அதுவும், விஜய்யுடன் காம்பினேஷன் காட்சிகள் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள். ஆனால், படப்பிடிப்பில் தான் அதெல்லாம் பொய் என்பது தெரியவந்தது. அந்த சமயத்தில் படத்தில் இருந்து விலகுவது, பலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார் நந்திதா.



Nandita was introduced to Tamil by 'Attakati'. Born in Bangalore, he is a folk Tamil village face. That's why, he continues to get the same role. Dinesh is pairing with 'Uthulthu', release next week. In this film, Raviteya is playing the role of Balu Saravanan. The talker asked the question about acting on a guest role. "When asked to act in the film 'Puli', they said that there were a lot of scenes. That said, there is a lot of comedy scenes with Vijay. But in the shooting it was a lie. At that time, the departure from the film would have a lot of impacts, so it did not do that, "Nandita said.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.