சற்றுமுன்

வைகோ விடுதலை!

கடந்த 15.07.2009 அன்று சென்னை ராணி சீதை ஹாலில், “நான் குற்றம் சாட்டுகிறேன்” என்ற புத்தக விழா நடைபெற்றது. அந்த உள்ளரங்க கூட்டத்தில் திரு. வைகோ பேசிய பேச்சினை 09.12.2009 அன்று காவல்துறை சுருக்கெழுத்தாளர் ஒரு புகாராக ஆயிரம்விளக்கு காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தார்.

அந்த புகாரின் மீது ஆயிரம்விளக்கு காவல்துறை ஆய்வாளர் இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். புலன் விசாரணை முடிந்த பின்பு 30.12.2010 அன்று சென்னை மாநகர 14 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு சம்மன் கடந்த பல வருடங்களாக அனுப்படாமலேயே இருந்தது.

பொதுச்செயலாளருக்கு பாஸ் போர்ட் வழங்குவதற்கு இந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆட்சேபணை இல்லை என்ற உத்தரவு இருந்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்க முடியும் என்று கூறப்பட்டதால், கடந்த 03.04.2017 அன்று சென்னை மாநகர 14 ஆவது குற்ற நடுவர் நீதிமன்ற பொறுப்பில் இருந்த திரு கோபிநாத் அவர்கள் முன்னிலையில் பொதுச்செயலாளர் ஆஜரானார். ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யாத நிலையில், பொதுச்செயலாளரை 17.04.2017 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 17.04.2017 அன்று சென்னை பெருநகர் 14-ஆவது நீதிமன்ற நடுவர் பொறுப்பிலுள்ள நடுவர் கோபிநாதன் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீதுள்ள வழக்கை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்திரவிட்டார். பொதுச்செயலாளர் அவர்களையும் 27.04.2017 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜராகிக் கொள்ளும்படி உத்திரவிட்டார்.

சென்னை புழல் சிறையிலிருந்து பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் 27.04.2017 அன்று சென்னை முதன்மை அமர்வு நீதிபதி ஏ. நஸீமா பானு அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பொதுச் செயலாளர் வைகோ சார்பில் சட்டத்துறைச் செயலாளர் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க ஆட்சேபணை இல்லை என்று உத்திரவு வழங்கும்படி மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பொதுச் செயலாளர் வைகோ அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆட்சேபணை இல்லை என்று உத்திரவு பிறப்பித்தார்.
மேலும், நீதிபதி ஏ. நஸீமா பானு அவர்கள் இந்த வழக்கை விசாரணைக்கு 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி உள்ளதாகவும், வருகிற ஜூன் மாதம் 2-ஆம் தேதி 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தின் முன்பு பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஆஜராகும்படியும் உத்திரவிட்டார்.
23.05.2017 அன்று பொதுச்செயலாளர் வைகோ அவர்களை பிணையில் விட மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு 24.05.2017 அன்று விடுமுறை கால அமர்வு நீதிபதி திரு. புருசோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதி அவர்கள் பொதுச்செயலாளர் அவர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி அவருடைய சொந்த ஜாமினில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

வழக்கில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சார்பில் சட்டத்துறைச் செயலாளர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ.நன்மாறன், வழக்கறிஞர்கள் ஆர்.பிரியகுமார், ஆர். செந்தில்செல்வன், ப.சுப்பிரமணி, பாஸ்கர், வினோத்குமார், இளங்கோவன் உள்ளிட்ட கழக வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள்.

52 நாட்கள் புழல் மத்திய சிறைச்சாலையில் இருந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று 25.05.2017 காலை 10.30 மணி அளவில் விடுதலையாகி வெளியே வந்தார்.

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு வருகின்ற 02.06.2017 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. இந்த விசாரணைக்காக கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் காலை 10 மணிக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தருகிறார்.

Vaiko, the general secretary of the 52-day Pooja Prison, released today at 10.30 am on 25.05.2010.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.