ஒன்றிரண்டைத் தவிர, விஜய் சேதுபதியின் பெரும்பாலான படங்கள் கையைக் கடிக்காத பட்ஜெட்டிலேயே தயாரிக்கப்படுபவை.
முதன்முறையாக மிகப்பெரிய பட்ஜெட் படமொன்றில் நடிக்கப் போகிறார் விஜய் சேதுபதி. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கி அருண் குமார், விஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
‘பாகுபலி-2’, ‘பவர் பாண்டி’, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படங்களின் தயாரிப்பாளரான ‘கே புரொடக்ஷன்ஸ்’ ராஜராஜன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். அருண் குமார் மிகச்சிறந்த இயக்குநர். அவர் தகுதிக்கான இடத்தை இன்னும் அடையவில்லை என்பது என் எண்ணம். இந்தப் படத்தில் அந்த உயரத்தை எட்டிவிடுவார்’ என்கிறார் தயாரிப்பாளர்.