ஆமீர் கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘டங்கல்’. உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம், தமிழிலும் ‘தங்கல்’ என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது.
குத்துச்சண்டை வீராங்கனைப் பற்றிய இந்தப் படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே, இந்தப் படத்தை பாகிஸ்தானிலும் வெளியிட முடிவு செய்தனர். படத்தைப் பார்த்த பாகிஸ்தான் சென்சார் போர்டு உறுப்பினர்கள், இரண்டு காட்சிகளை நீக்கினால் மட்டுமே திரையிடலாம் என்று தெரிவித்தனர்.
ஒன்று, இந்திய தேசியக்கொடி பறக்கும் காட்சி. இரண்டாவது, இந்திய தேசிய கீதம் இசைக்கப்படும் காட்சி. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஆமீர் கான், படத்தை அங்கு வெளியிட வேண்டாமென முடிவு செய்துள்ளார்.