ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தான் உருவாக்கிய படைப்புக்கு விருது கிடைக்கும் எனக் காத்திருக்கும் ஒருசிலரைப் போல நான் கிடையாது’ எனக் கூறியுள்ளார் ராஜுமுருகன். “இந்தப் படத்தை எடுக்கும்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்களை என்னுடைய படம் சென்றடைந்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தேன். ‘ஜோக்கர்’ படம் அப்படி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. இந்த விருது, சமூகத்தில் போராடிவரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விருது. இந்த விருது மூலம், எதிர்காலத்தில் அரசியல் படங்கள் நிறைய வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புரட்சிக்கான கருவியாக கலையைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.
Food Online
அக்னிப்பிரவேசம் - மதுரா கவிதைகள்
விழிகளில் வடியும் நெருப்புத்துளிகள் எரித்தது எதனை? நெஞ்சின் தீக்கங்குகளாய் உணர்வுகளால் விசிறப்பட்டு எத்தனை முறை எரிந்து அணைவது? புவியெ...
Follow us
Insurence policy
‘இந்த விருது, புரட்சிக்கு வழிவகுக்கும்’
ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜோக்கர்’ படத்துக்கு, சிறந்த மாநில மொழிப் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. ‘தான் உருவாக்கிய படைப்புக்கு விருது கிடைக்கும் எனக் காத்திருக்கும் ஒருசிலரைப் போல நான் கிடையாது’ எனக் கூறியுள்ளார் ராஜுமுருகன். “இந்தப் படத்தை எடுக்கும்போது இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என நான் நினைத்து கூடப் பார்க்கவில்லை. பெரும்பாலான மக்களை என்னுடைய படம் சென்றடைந்து, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் நினைத்தேன். ‘ஜோக்கர்’ படம் அப்படி நிகழ்ந்ததில் மகிழ்ச்சி. இந்த விருது, சமூகத்தில் போராடிவரும் அடித்தட்டு மக்களுக்கு கிடைத்த விருது. இந்த விருது மூலம், எதிர்காலத்தில் அரசியல் படங்கள் நிறைய வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. புரட்சிக்கான கருவியாக கலையைப் பயன்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார் ராஜுமுருகன்.
- Blog Comments
- Facebook Comments