*எனது நண்பன் ஒரு பெண்ணை காதலித்தான், அந்த பெண் இவனை விட வசதி, படிப்பு, வேலை, என ஒரு படி அதிகம்... திடீரென ஒருநாள் என் நன்பன் காணாமல் போனான், அவன் பெற்றோர்களுடன் சேர்ந்து நானும் அவனை தேடினேன்,
*காரணம் எனக்கு விவரம் தெரிந்த வயதிலிருந்து நானும் அவனும் ஒரே பள்ளி, ஒரே கல்லூரி, ஒரே இடத்தில் வேலை... இன்னும் சொல்லவேண்டும் என்றால் அவன் எனக்கு ஒரு நல்ல ஆசான் கூட, எதிர்மறை சிந்தனை உடையவன்...
*அன்று இரவு சரியாக 12 மணியளவில் என் வீட்டிற்கு வந்தான், எங்கு போனாய்! எல்லோரும் உன்னை தேடுகிறார்கள்.. முதலில் உன் வீட்டிற்கு செல்! என்றேன் .. பேசாமல் நின்றான். ஏதாவது பேசுடா! ... என நான் பேச ஆரம்பிக்க சிறிது நேரத்தில் அவன் கண் கசிந்து கூணி குறுகி அழுக ஆரம்பித்தான்.
*எங்களுடைய நட்பில் அழுகை என்ற வார்த்தைக்கு இடம் இல்லாத போது என் நண்பன் என் கண் முன்னே அழுவது என் உடல் எங்கும் காரணம் என்னவாக இருக்கும்! என்ற கோபத்தில் சிலிர்த்தது,
*அப்போதுதான் எனக்கு விவரம் புரிந்தது. "ஒன்றும் கவலைப்பட தேவையில்லை உன் காதலியை நீ பதிவு திருமணம் செய்துகொள் உன்னுடன் நான் நிற்பேனடா" என சினிமாவில் துணை நடிகர் போல தைரியம் கூறினேன். அவன் ஒரே வார்த்தையில் கூறினான்.
*"அதற்கு அவசியமே இல்லை! இன்றுதான் அவளுக்கு திருமணம் நடந்து முடிந்தது என்று...
*எனுக்குள் பல கேள்விகள், பல சிந்தனைகள்... "அவளுடன் நீ பேசினாயா!" என நான் கேட்க "ம்ம்! அவள் என்னை வந்து சந்தித்தாள், கையில் ஒரு பெட்டியோடு, கண் கசிந்தபடி "நாளை எனக்கு திருமணம் நாம் எங்காவது ஓடிவிடுவோம் என கடைசி நேரத்தில் ... "பிறகு என்ன!? நீ என்ன சொன்னா!!!" என்று நான் கேட்க...
*"நீ உங்கள் வீட்டில் பார்த்த மாப்பிள்ளையையே திருமணம் செய்துகொள் என்றேன்"
பைத்தியமாடா நீ! உன் காதல் உண்மையில்லையா!" என்று நான் கோபமாக கேட்க...
காதல் என்று வரும்போது திருமணம் மட்டும்தான் ஒரு தீர்வாக இருக்கும் ஆனால் திருமணம் நடந்தப் பிறகு இந்த உலகம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடத்தின் மூலம் "ஏன் திருமணம் செய்தோம்!" என்ற ஒரு எண்ணம் கூடவே தோன்றிடும்,
அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தால் நான் அந்த இடத்தில் ஒரு தகுதி இல்லாத ஆணாக நிற்பேன், வசதியாக வாழ்ந்த பெண் அவள்! அவ்வளவு சீக்கிரமாக என் வாழ்க்கையை அவள் கற்றுக்கொள்ள இயலாது அதோடு என்னையும் அவள் பெற்றோர் ஒரு மனதா கூட ஏற்கவில்லை!
நன்றாக யோசித்துப் பார்த்தால் அவள் திருமணத்தை பற்றி அவள் பெற்றோர் எவ்வளவு கனவு கண்டிருப்பர்! அவர்களை கஷ்டப்படுத்தி நான் அப்படி ஒரு வாழ்க்கை வாழவேண்டுமா!... பெண் பிள்ளையை பெற்ற எல்லா தந்தைக்கும் இறுதியில் கிடைக்கும் ஒரு பெரிய சந்தோஷம் அவளின் திருமணம் மட்டும்தான்... மாப்பிள்ளையையும் அவர் குடும்பத்தையும் விசாரித்தேன்... இனம் இனத்தோடுதான் சேரும் என்பது போல பணம் பணத்தோடுதான்.டா மச்சான் சேரும்.... என்றான்.
காதல் என்ற பெயரில் அவளை கஸ்டப்படுத்த விரும்பல.. காதல்ல ஜெயிச்சாலும் வாழ்க்கைல ஜெயிக்காட்டி அந்த காதல் வெறுத்திடும். இப்ப அவள் வாழ்க்கைல ஜெயிச்சிருக்கா என் காதலும் அவகிட்ட மரியாதையா இருக்கு . என்றான் ...
நான் பதில் தெரியாம அவன் கையைப்படித்தேன்.. வா முதல்ல உன்
வீட்டுக்கு போகலாம் என்றேன்.....
Summary:
Marriage is the only solution when it comes to love but after the marriage, the world teaches us "Why did you marry!" That is,If she gets such an idea then I will stand in the place of an unqualified man, the comfortable girl she is!
She can not read my life so quickly and her parents do not even accept me!