சற்றுமுன்

எங்கே தேடுவேன் ? எங்கே தேடுவேன் ?பூமி எதனால் சுழல்கிறதோ தெரியாது . ஆனால் ,பூமியில் நாம் வாழும் வாழ்க்கை " பணம்" என்ற அச்சைப்பற்றியே சுழலும்படி செய்துவிட்டார்கள் ,சதிகாரர்கள் . பண்ட மாற்று முறைக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட பணம் .இன்று மனிதனின் சுவாசமாகவே மாறிவிட்டது . நிறைய பிரச்சனைகளின் தொடக்கப்புள்ளியாகவும் முடிவுப்புள்ளியாகவும் பணமே இருப்பது நம் வாழும் காலத்தின் கோலம் . நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் ,நம் உண்மையான தேவையை  உணர்ந்து பணத்தைப் பயன்படுத்தினால் பல சிக்கல்களிலிருந்து தப்பிக்கலாம் . நம் கடுமையான உழைப்பின் மூலம்  சம்பாதிக்கும் பணத்தை விளம்பரங்களின் மூலம் கவர்ந்து செல்ல  ஒரு பெரும் கூட்டம் எப்போதும் தயாராகவே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் .
"இளமையில் பெருக்காவிட்டலும் முதுமையில் சிறுக்காமல் இருக்கவேண்டும் "  என்று சங்கப்பாடல் ஒன்று கூறுகிறது . அதாவது இளமைப் பருவத்தில் அதிகம் சம்பாதிக்காவிட்டாலும் ,முதுமைப் பருவத்தில் இருப்பதை இழக்காமல் இருக்கவேண்டும் என்பது தான் அந்தப் பாடலின் பொருள் . எல்லோரது வீட்டிலும் இருக்கும் பொருள் நம் வீட்டிலும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை . மனிதன் வாழும் வரை பணம் தொடர்பான சிக்கல்களும் தொடரும் .எல்லோரும் பணத்தைத் தேடி ஓட வேண்டியதும் தொடரும் . தேவையைக் குறைத்துக் கொண்டால் பணம் நமக்கு அடிமை . தேவையை வளர்த்துக் கொண்டால் நாம் பணத்திற்கு அடிமை .
1952 ஆம் ஆண்டு வெளிவந்த " பணம் " என்ற திரைப்படத்தில் கண்ணதாசனால் எழுதப்பட்ட  இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது . N .S .கிருஷ்ணன் அவர்களை நினைவுபடுத்தும் பாடலாகவே இன்றும் உள்ளது . N .S .கிருஷ்ணனால் சிறப்பாக பாடி நடிக்கப்பட்ட பாடலிது .
பாடல் வரிகள் :
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும் பணத்தை
எங்கே தேடுவேன்?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கருப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக் கொண்டாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
கிண்டி ரேசில் சுத்திக் கிறுகிறுத்தாயோ?
அண்டின பேர்களை ரெண்டும் செய்யும் பணத்தை
எங்கே தேடுவேன் பணத்தை
எங்கே தேடுவேன்?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
பூமிக்குள் புகுந்து புதையலானாயோ?
பொன் நகையாய்ப் பெண் மேல் தொங்குகின்றாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சாமிகள் அணிகளில் சரண்புகுந்தாயோ?
சந்நியாசி கோலத்தோடு உலவுகின்றாயோ?
எங்கே தேடுவேன்? பணத்தை எங்கே தேடுவேன்?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இருப்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவரிடம் இருக்காத பணந்தனை
எங்கே தேடுவேன் பணத்தை
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
தேர்தலில் சேர்ந்து தேய்ந்து போனாயோ?
தேக சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய்ப் புகைந்து போனாயோ?
எங்கே தேடுவேன் எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணமே பணமே பணமே பணமே!

Summary:
The earth does not know what is rotating. But the life we ​​live in the earth has made the spoils of the "money", conspirators. Money made as a replacement for the commodity exchange. Today it has become man's breath. The starting point and the end point of a lot of problems is the cost of our time. Without comparing ourselves to others, realizing our real need and using money can escape many problems

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.