சற்றுமுன்

தாய் வீடு - மதுரா கவிதை

சிறகடித்துப் பறந்த சிறுவயது நினைவெல்லாம்
சில்லென்று நெஞ்சில் தேனாய் இனித்திருக்க
உட்கார்ந்த இடத்திலேயே உணவுண்டு
இருப்போரை ஏவல் செய்து
பிடிக்காத செயல் செய்ய பிடிவாதம்..
எதற்கெடுத்தாலும் எதிர்வாதம்...
பாசத்தின் பிடியதனில் மதிமயங்கி மகுடமதை சூட்டி
மனமகிழ்ந்த காலம்...
ஒரே நாளில் அத்தனையும் தலைகீழாகி
பொறுப்புகளும் கடமைகளும் உடன்சேர
புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்கின்ற
நேரமதில்....
தாய்வீட்டின் சுகம் தேடி
ஏக்கமது அடிமனதில் இழைந்திருக்கும்...
கிளைகள் ஒளி தேடி இடம்மாறி
நின்றாலும்..
வேர்கள் முளைவிட்ட இடத்திலேயே முகிழ்த்திருக்கும்..

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.