சற்றுமுன்

பிரிவுகள் -மதுரா கவிதைகள்

காய்ந்து உதிர்கின்ற இலைகளாய்
வாழ்வின் பிரிவுகள்
இதயத்தின் நினைவுகளை உலுக்கி
உணர்வுகளை வதைக்கிறது..
அழியாத் தடங்களாய் பதிந்து
நங்கூரமிட்டு அமர்ந்திருக்கும்
எண்ணங்கள்..
தள்ளினாலும் போவதில்லை..
கோபத்தில் உதறினாலும்
ஒட்டிக்கொள்ளும்
குழந்தையென சுற்றி வந்து
பற்றிக் கொள்கிறது..
எத்தனை நிகழ்வுகள்...
எவ்வளவு மகிழ்ச்சியான தருணங்கள்...
என்னென்னவோ வாக்குவாதங்கள்...
ஒவ்வொன்றும் நினைவுச் சரமாக
நெஞ்சைக் கட்டி வைக்க..
இல்லாத வெறுமையோ...
அடுத்த நாளை எதிர்நோக்க
அச்சப்பட வைக்கிறது...
எல்லாமே பிரிந்து போனால்
எஞ்சியிருப்பது எதுவென
சிந்திக்க வைக்கிறது...
விதியின் சதியில் சிலதும்
விவகாரமாய்ப் பலதும்
வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட பின்
காய்ந்து கிடக்கும்
சருகுகள் புன்னகைப்பதில்லை...

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.