சற்றுமுன்

தமன் இசையமைத்த பாடலை பயன்படுத்திக் கொள்ளும் இளம் இசையமைப்பாளர்


விஜய் டி.வி.யின் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் அஜீஸ். 10க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் இவர், பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடித்த ‘பாம்பு சட்டை’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து, பாபி சிம்ஹா, ஷிவதா நாயர் நடித்துள்ள ‘வல்லவனுக்கும் வல்லவன்’ படத்துக்கு இசையமைத்து வரும் அஜீத், அடுத்ததாக அஷ்வின் – ஸ்வாதி நடித்துள்ள ‘திரி’ படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஒரு பாடலையும் கம்போஸ் செய்துவிட்டார் எஸ்.எஸ்.தமன். ஆனால், திடீரென அவர் விலகிக்கொள்ள, அந்த வாய்ப்பு அஜீஸுக்கு கிடைத்திருக்கிறது. நான்கு பாடல்களுக்கு இசையமைக்கும் அஜீஸ், தமன் இசையமைத்த பாடலையும் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.