சற்றுமுன்

சூர்யாவின் பெருந்தன்மை


உறவினர்கள் இறந்தாலே அரை மணி நேரம் தலையைக் காட்டிவிட்டு அப்படியே திரும்பி விடுகிற காலகட்டம் இது. அதுவும் சினிமாக்காரர்கள் என்றால், ஒரே டேக்கில் மாலையைப் போட்டுவிட்டு திரும்பிவிடுவார்கள். அப்படிப்பட்ட கோடம்பாக்கத்தில் ஆச்சரியமான ஒரு விஷயம் நடந்திருக்கிறது. சமீபத்தில், இயக்குநர், ஒளிப்பதிவாளரான கே.வி.ஆனந்தின் தந்தை இறந்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட சூர்யா, அவர் வீட்டுக்குச் சென்று 5 மணி நேரத்துக்கும் மேலாக இருந்திருக்கிறார். கே.வி.ஆனந்தே சொல்லியும் கூட கேட்காமல், அங்கேயே இருந்து மயானம் வரை கூட சென்றிருக்கிறார் சூர்யா. அத்துடன், இறுதிக்காரியத்துக்கு வேண்டிய உதவிகளையும் செய்திருக்கிறார். சூர்யாவின் இந்தப் பெருந்தன்மையைப் பார்த்து கோடம்பாக்கமே வியக்கிறது

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.