இயக்குநர் விஜய்யை விவாகரத்து செய்தாலும், அவர் தனக்கு நல்ல நண்பர் என்றுதான் சொல்லி வருகிறார் அமலா பால். தற்போது தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்துவரும் அமலா பால், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ‘வனமகன்’ படத்தை முடித்துவிட்ட விஜய், குறுகிய காலத்தில், அதாவது 30 – 35 நாட்களுக்குள் ஒரு படத்தை இயக்குகிறார். பெண்ணை மையப்படுத்திய இந்தக் கதை, திகில் படமாக இருக்கும்.
இதில், அமலா பால் நடிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. இந்தப் படத்தை முடித்தபிறகே ‘சார்லி’ மலையாளப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார். துல்கர் சல்மான் வேடத்தில் மாதவனும், பார்வதி நாயர் வேடத்தில் சாய் பல்லவியும் நடிக்கின்றனர்.