ரஜினியைப் போலவே ஸ்ரீராகவேந்திரா சுவாமிகள் மீது அளவற்ற பக்தி கொண்டவர், ராகவா லாரன்ஸ். சென்னையில் ராகவேந்தருக்கு கோயில் கட்டி நிர்வகித்துவரும் அவர், தன்னுடைய தாயாரான கண்மணிக்கும் கோயில் கட்டியுள்ளார்.
அந்தக் கோயிலில் வைக்கப்படும் அம்மா சிலையை, வட இந்திய சிற்பிகளிடம் வடிவமைத்து சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். விரைவில் திறப்பு விழா காணப்போகும் இந்த அம்மா கோயிலுக்குள், சர்ச் ஒன்றையும் கட்டியிருக்கிறாராம் லாரன்ஸ்.
அம்மா கோயில் திறக்கப்படும் தினத்தன்றே சர்ச்சையும் திறக்க முடிவெடுத்துள்ளாராம். இதனால், தற்போது மாலை போட்டு விரதமிருக்கிறார் லாரன்ஸ்.