உலக அளவில் மன அழுத்தம் முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.
உலகில் உள்ள 5 பெண்களில் ஒருவரும், 20 ஆண்களில் ஒருவரும் வாழ்வில் ஒரு முறையாவது தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதா
க ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 20-ல் ஒருவருக்கு மன அழுத்தம் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட
ுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமை, வெறுமையாக உணர்வது, தன்னம்பிக்கை இழப்பது, குற்ற உணர்வு, முடிவுகள் எடுப்பதற்கு சிரமப்படுவது, ஞாபக மறதி, அதிதூக்கம் அல்லது தூக்கம் இன்மை, தற்கொலை எண்ணம் போன்றவை முக்கிய அறிகுறிகளாக கூறப்படுகிறது.
குடிப்பழக்கம், அதிகமாக புகைப்பது கூட மன அழுத்ததின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்தியாவில் மன அழுத்தம் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சரியான சிகிச்சை எடுத்துகொள்வதன் இந்த நோயை தீர்க்க முடியும். குறுகிய கால மன அழுத்தம் குறித்து பயம்கொள்ளத் தேவையில்லை. ஆனால் நாட்பட்ட மன அழுத்தத்தின் விளைவுகள் ஆபத்தானவை என்கின்றனர் நிபுணர்கள். ஒருவருக்கு மன அழுத்தம் உள்ளதா என்பதை சில அறிகுறிகள் தெரிவித்துவிடும்.ஆனால் அவற்றை உணரும் முன்பே அது உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
மன அழுத்தத்துக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறுபவர்கள் மிகவும் குறைவு. இது அதிகமாகும்போது அது உடல் நிலையைப் பல வழிகளில் பாதிக்கும். குடிப்பழக்கம், போதைப்பழக்கம், உடல் இளைத்தல், உடற்பயிற்சியற்ற சோம்பல் வாழ்க்கைமுறை, இரைப்பைப் புண், ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, மனப் பதற்றம், மன பயம், குடல் எரிச்சல் நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு, ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற பல தொல்லைகளுக்கு மன அழுத்தம் வழிவிடும்.
மன அழுத்தம் உருவாவது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வெளிப்பாடுகளை ஏற்படுத்தும். சிலருக்குத் தோள்வலி வரும். சிலருக்கு சுவாசம் துரிதப்படும். உங்களுக்கு ஏற்படும் அடையாளம் என்னவென்று தெரிந்து வைத்துக்கொண்டால், அறிகுறிகள் தென்படும் போதே அவற்றிலிருந்து வெளிவருவதற்கு உடனடி முயற்சிகளில் இறங்கமுடியும்.