ரஜினியை ஒருமுறையாவது தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என ஏங்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள்.
பல வருடங்களாகவே ரசிகர்களைச் சந்திக்காமல் தள்ளிப்போட்டு வந்த ரஜினி, வருகிற 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சந்திக்க இருக்கிறார். அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல…
தினமும் 1500 ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார்.
கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா திருமண மண்டபத்தில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது.
தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த ரசிகர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்கின்றனர்.