சற்றுமுன்

நன்கொடையாக ரூ. 3 லட்சம் கொடுத்த நிக்கி கல்ரானி


அடுத்த வருடத்தில் நடிகர் சங்க கட்டிடத்தைக் கட்டி, திறப்புவிழா நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகள். இந்நிலையில், யாரும் கேட்காமல் நடிகர் – நடிகைகள் தாமாகவே முன்வந்து சங்க கட்டிடம் கட்ட நிதி உதவி அளிப்பதாக கூறப்படுகிறது. சிறிய திருமண மண்டபம் கட்டும் செலவை ஐசரி கணேஷும், பிரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தியும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன், பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீ, சத்யபிரியா, ராதா, ஜனனி, ஜெயசித்ரா, பி.ஆர்.ஓ. ஜான்சன் என பலரும் நிதி அளித்துள்ளனர். அந்த வரிசையில், நிக்கி கல்ரானியும் 3 லட்சம் ரூபாய் தந்துள்ளார். நடிகர் சங்க அலுவலகம் வந்து, செயற்குழு உறுப்பினரான ஸ்ரீமனிடம் வழங்கினார். செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் ஆளுக்கு 5 கோடி ரூபாய் தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.