வட இந்தியாவில் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனுக்குத் தயாராகி விட்டார் கமல். தென்னிந்திய சேனல்களிலேயே அதிகமான டி.ஆர்.பி. ரேட்டிங்கைப் பெற இருப்பதாகக் கூறப்படும் இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் வெர்ஷனுக்கு கமல் தான் பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர் நினைத்தாராம். ஹிந்தியில் அமிதாப் பச்சன், சஞ்சய் தத் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை, தற்போது சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.
தமிழின் கலாச்சாரத்துக்கு ஏற்றபடி, இந்த நிகழ்ச்சியில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறார்களாம். இதன் ஷூட் எங்கு நடக்கப் போகிறது தெரியுமா? மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள லோனவ்லா என்ற இடத்தில்தான் ஷூட் நடக்க இருக்கிறது. மும்பையில் இருந்து 96 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இந்தப்பகுதி, மலைப்பிரதேசமாகும். இந்த ஷூட்டிங்குக்காக, ஆடம்பர பங்களா ஒன்று தயாராகி உள்ளது.