ராகவா லாரன்ஸ் ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ள ‘சிவலிங்கா’ நாளை ரிலீஸாகிறது. பி.வாசு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் படம் குறித்துப் பேசிய ரித்திகா சிங், “என் வாழ்க்கையில் இதுவரை சேலை கட்டியதே கிடையாது. ஆனால், இந்தப் படத்துக்காக கட்ட நேர்ந்தபோது, ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
அதேபோல், காலையில் இருந்து மாலை வரை இடைவிடாமல் டான்ஸ் ஆடி ஆடி என் கால்கள் சோர்ந்துவிட்டன. இவை எல்லாவற்றையும் நான் செய்யக் காரணம், இந்தப் படத்தின் கதைதான். இதில் கிடைத்த அனுபவத்தை என்னால் மறக்கவே முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.