சற்றுமுன்

நயன்தாரா விஷயம் உண்மையா?



சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன், நயன்தாராவுடன் நடிக்கிறார் என்பதுதான் கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் தமன்னா மற்றும் ஹன்சிகாவுடன் அவர் நடித்தபோதே, ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு அவரைக் கலாய்த்தனர். தற்போது, கடந்த இரண்டு நாட்களாக மறுபடியும் அவரைப் பற்றிய மீம்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. ஆனால், இந்தச் செய்திக்கு நயன்தாரா பக்கத்தில் இருந்து நோ ரெஸ்பான்ஸ். ஒருவேளை, நயன்தாரா இதற்கு ஓகே கூட சொல்லலாம் என்கிறார்கள் சிலர். இப்படிப்பட்ட சில அதிரடியான முடிவுகளை எடுக்கக் கூடியவர்தான் நயன். ஹீரோக்களுடன் ஜோடி போடாமல், தனியாகவே பல படங்களில் நடித்துவரும் நயன், இதையும் செய்யலாம் என்கிறார்கள்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.