ஜெயம் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் நடித்துவரும் படம் ‘வேலைக்காரன்’. இந்தப் படம், ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் என திடீரென நேற்று அறிவித்திருக்கின்றனர்.
ஆயுத பூஜை விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏனெனில், விடுமுறை காலத்தில் ரிலீஸானால்தான் அதிக கலெக்ஷன் பார்க்க முடியும். அதிக கலெக்ஷன் பார்த்தால் தான் அடுத்தடுத்த லெவலுக்குச் செல்ல முடியும் என்ற பக்கா பிளான் தான் இவை அனைத்திற்கும் காரணம் என்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.