சற்றுமுன்

திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்.

திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி, உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம்,  உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, 'கோபுரங்கள் சாய்வதில்லை', 'குரு சிஷ்யன்', 'ராஜாதி ராஜா' போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.
தென்னிந்திய மொழிகளில், 1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில்  நடித்துள்ளார்.
இவர், 'வண்டிச்சக்கரம்' படத்தின்மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக, 2014-ம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.