சற்றுமுன்

ஐரோப்பாவுக்குப் பறக்கும் விஜய்


அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங், ஐரோப்பாவில் நடைபெற உள்ளது. இதுவரை, சென்னை மற்றும் ராஜஸ்தானில் 4 ஷெட்யூல்களைப் படமாக்கிய அட்லீ, 5வது ஷெட்யூலுக்காக ஐரோப்பா செல்கிறார். விஜய்யுடன் காஜல் அகர்வால் மற்றும் சமந்தாவும் செல்கின்றனர். ராஜஸ்தானில் ஷூட்டிங் நடைபெற்றபோது, நீரஜா கோனா விஜய்யின் ஸ்டைலிஷ்ட்டாக இருந்தார். ஆனால், ‘தெறி’ படத்துக்கு ஆடைகளை வடிவமைத்த கோமல் ஷகானி தற்போது ஐரோப்பா ஷெட்யூலில் விஜய்யின் காஸ்ட்யூம் டிசைனராக இணைந்துள்ளார். நாளை, படக்குழு முழுவதும் ஐரோப்பா கிளம்புகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. அப்போ, அஜீத் பிறந்த நாளுக்கு சென்னையில இருக்க மாட்டாரா விஜய்?

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.