எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத ‘ஜீ பூம்பா’ மாய உலகம்தான் சினிமா. எல்லா முடிவுகளுமே திடீர் திடீர் என்றுதான் எடுக்கப்படும். ஆனால், எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்யும் அஜீத்தும் அந்தப் பட்டியலில் இணைந்ததை என்னவென்று சொல்வது? அஜீத்தின் பிறந்த நாளன்று ‘விவேகம்’ படத்தின் டீஸர் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.
ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்று தகவல் பரவ, ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தத் தகவல் அஜீத்தின் காதுக்கும் போயிருக்கிறது. இந்நிலையில், படத்தின் எடிட்டரான ரூபன், பல்கேரியாவுக்குச் சென்றிருக்கிறார். வேலை காரணமாக அங்கு செல்வதாக ட்விட்டரில் அவர் குறிப்பிட்டிருப்பதால், ஒருவேளை ‘விவேகம்’ படத்தின் டீஸர் கட் பண்ண போயிருக்கலாம் என்கிறார்கள்.