சற்றுமுன்

விஜய் படத்திற்காக அட்ஜஸ்ட் பண்ணும் ஏ.ஆர்.முருகதாஸ்


மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் படம் ‘ஸ்பைடர்’. இந்தப் படத்தில், பிரபல மலையாள நடிகரான ஹரீஷ் பெராடி நடித்து வருகிறார். இவர், ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘கிடாரி’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

இவருக்கு, அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால், அந்த சமயத்தில் ‘ஸ்பைடர்’ படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்க, என்ன செய்வதென்று புரியாமல் விழித்திருக்கிறார்.

விஷயம் ஏ.ஆர்.முருகதாஸ் காதுக்கு செல்ல, ‘முதலில் விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள். உங்கள் காட்சிகளை பிறகு எடுத்துக் கொள்கிறேன்’ என்று சொல்லி அனுப்பி வைத்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ். ஹரீஸ் பெராடி இப்போது ஐரோப்பாவில் விஜய்யுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Summary :AR Murugadoss will be adjusting for Vijay's film Mahesh Babu is playing the role of AR Murugadoss in the movie 'Spider' by Rachel Breathing. In this film, the famous Malayalam actor Harish Peradi is acting. He has acted in Tamil films like 'Aayirathil Oruvan', 'Gitari' and 'Lord Kadalai'.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.