எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டும் சேர்த்து இரண்டாயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம். பிரமாண்டத்துக்குப் பெயர்போன இந்தப் படத்தை, உலகமே கொண்டாடுகிறது. இந்தப் படத்தின் பாதி கிராஃபிக்ஸில் வடிவமைக்கப்பட்டது என்றாலும், விழியை விரிய வைக்கும் செட்டுகள் எல்லாமே நிஜம். இந்த செட்டுக்காகப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக், பைபர், கெமிக்கல் எல்லாம் வண்டி வண்டியாகக் குவிந்து கிடக்கிறதாம். பல நூறு வருடங்கள் ஆனாலும் இவை மட்காது என்பதுதான் ஒரே ஒரு சோகம். இதனால், ராஜமெளலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆணையத்திடம் மனு அளித்திருக்கிறார்களாம் ஆர்வலர்கள் சிலர். ஆனால், மத்திய அமைச்சரான வெங்கய்ய நாயுடு, ‘பாகுபலி’ பார்த்துவிட்டு பாராட்டியிருக்கிறார். எனவே, அவர்மீது எந்த நடவடிக்கையும் பாயாது என்கிறார்கள்.
Summary:
Summary: