சற்றுமுன்

மணிரத்னத்தை ஃபாலோ செய்கிறாரா பா.இரஞ்சித்?


‘ரோஜா’ தொடங்கி, மணிரத்னம் இதுவரை இயக்கிய எல்லா படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் மியூஸிக். அவரைத் தவிர்த்துவிட்டு இன்னொருவரை நினைத்துகூடப் பார்க்காதவர் மணிரத்னம். அதனால்தான், தமிழ்ப் படங்கள் மட்டுமின்றி, தான் இயக்கிய ஹிந்திப் படங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானையே இசையமைக்க வைத்தார். பா.இரஞ்சித்தும் அதே பாணியைத்தான் கடைப்பிடிக்கிறார். ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ என தான் இயக்கிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த சந்தோஷ் நாராயணனை விட்டு அவர் விலகுவதாகத் தெரியவில்லை. ரஜினியை வைத்து அவர் இயக்கவிருக்கும் புதிய படத்திலும், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணனே பணியாற்றுகிறார். அவர் இசையமைக்கும் வேலையைத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்.
Summary:
B.Ranjith has follow manirathanm style. Roja 'and AR Rahman's music for all the films directed by Mani Ratnam. Maniratnam does not even think of someone else. That's why he also composed AR Rahman for his Hindi films, not just Tamil films. Praneethi practices the same style. He did not seem to leave Santosh Narayan's composer for three films directed by 'Attakati', 'Madras' and 'Kabali'

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.