பி.கோபால் இயக்கத்தில் நயன்தாரா நடித்துவரும் தெலுங்குப் படம் ‘பலம்’. கோபிசந்த் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், இரண்டு பாடல் காட்சிகளை எடுக்க வேண்டியது மட்டும்தான் பாக்கி. ஆனால், மொத்தமாக சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்துக்காக தேதிகளைத் தூக்கிக் கொடுத்துவிட்டதால், ‘பலம்’ படக்குழுவினர் நயனுக்காக நீண்ட நாட்கள் காத்திருந்தனர்.
ஒருவழியாக மனமிறங்கிய நயன், இரண்டு நாட்களுக்கு முன்பு ‘வேலைக்காரன்’ ஷூட்டிங்கை முடித்துவிட்டு, அவர்களுடன் போர்ச்சுகல் புறப்பட்டுப் போயிருக்கிறார். அங்கு, இதுவரை யாரும் படம்பிடிக்காத இடத்தில் பாடல் காட்சிகளை ஷூட் செய்யப் போகிறார்கள். இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், பிரம்மானந்தம், கோட்டா சீனிவாச ராவ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறது. மணிசர்மா இசையமைக்கிறார்.
Summary"Nayantara is a Telugu film starring P. Kopal. Gopichand is playing the role of the heroine in this film, only to take two song scenes. But, as a whole, the 'Balam' filmmakers were waiting for Nayan for a long time because the whole of the film was put up for Sivakarthikeyan's 'servant'. Finally, Nyan, who had just completed the 'servant' shooting two days ago, has gone to Portugal