சற்றுமுன்

ரஜினிக்கு ஜோடி!வைட்டிங் லிஸ்டில் கஜோல்?


ராஜிவ் மேனன் இயக்கத்தில் 1997ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் நடித்தார் கஜோல். அதன்பிறகு, பாலிவுட்டிலேயே செட்டிலாகி விட்டார். தற்போது, 20 வருடங்கள் கழித்து தனுஷுடன் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் மூலம் மறுபடியும் தமிழுக்கு வந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் கஜோலின் நடிப்பைப் பார்த்து, ‘ஆஹா… ஓஹோ…’ எனப் புகழ்ந்துள்ளார் தனுஷ். இந்நிலையில், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு நாயகி இன்னும் செட்டாகவில்லை. வித்யா பாலன் கால்ஷீட் இல்லாததால் நடிக்க மறுக்க, வேறொரு பாலிவுட் நடிகையைத் தேடிவந்தனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளரான தனுஷுக்கு, நம் படத்தில் நடித்த கஜோலை ரஜினிக்கு ஜோடியாக்கினால் என்ன என்று தோன்றியிருக்கிறது. இதை அவர் ரஜினியிடமும், பா.இரஞ்சித்திடமும் கூற, அவர்களுக்கும் சம்மதம் என்றே தெரிகிறது. இருந்தாலும், ஸ்கிரீன் டெஸ்ட்டுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்றிருக்கிறார்கள்

Summary:Kajol appeared in the 1997 film 'Electric Dream' directed by Rajiv Menon. After that, he was settled in Bollywood. Now, after 20 years, he has come back to Tamil with Dhanush 'Unemployed Graduation 2'. Dhanush has praised Kajol's performance in the film and said, 'Oh ... ohoh ...' In this case, the heroine is not set up for Rajini's new film in the film

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.