சற்றுமுன்

‘விஐபி 2’ தனுஷ் பிறந்தநாள் அன்று வெளியாகும்


தனுஷ், அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேலையில்லா பட்டதாரி 2’. செளந்தர்யா ரஜினிகாந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும்’ என தனுஷ் நேற்று காலை ட்விட்டரில் அறிவித்ததில் இருந்தே, ஆளாளுக்கு ஒரு தேதியைச் சொன்னபடி இருந்தனர். இதனால், இந்த விஷயம் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்நிலையில், தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ஆம் தேதி ‘விஐபி 2’ ரிலீஸாகும் என நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இந்தத் தேதியை முடிவு செய்தது செளந்தர்யா தானாம். தனுஷ் வேண்டாம் என மறுத்தும், விடாப்பிடியாக நின்று தனுஷை சம்மதிக்க வைத்தாராம் செளந்தர்யா.

Summary:'Dhanush is getting released on birthday' VIP 2 '
Dhanush, Amala Paul, Kajol, Samudrakani are doing the movie 'Unemployed Graduate 2'. Soundarya Rajinikanth has directed this movie. After the shooting of the post production process, the release date of the film has been announced

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.