சற்றுமுன்

மாட்டிறைச்சி தடை: தி.மு.க. போராட்டம்

மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராக எதிர்வரும் 31 ஆம் தேதி சென்னையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தப்போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

மிருகவதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாட்டிறைச்சியை விற்பனை செய்ய முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க. தலைமை கழகம் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் குறித்த சட்டம் அமைந்துள்ளதாகவும், தி.மு.க. ஆரம்பத்தில் இருந்தே இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியா முழுவதிலும் உள்ள விவசாயிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், தற்போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள விவசாயிகள் மற்றுமொரு பிரச்சினைக்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அதன் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 9 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் நடத்தப்படும் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

DMK has said that it will hold a protest protest in Chennai on 31st May against the ban imposed by the government on beef sale. Announced.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.