சற்றுமுன்

சாமி-2’ படத்தில் இரு வேடங்களில் விக்ரம்


2003ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில், விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ் நடிப்பில் வெளியான படம் ‘சாமி’. அப்போதைய மதிப்பில் 5 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட படம், 31 கோடி ரூபாயை வசூலித்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போகிறார் ஹரி. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அமையும் என்று கூறியிருக்கிறார்கள். விக்ரம், த்ரிஷாவே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷும் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்திலேயே விக்ரம் – த்ரிஷாவுக்குத் திருமணமாகிவிட்டதால், விக்ரமுக்கு ஜோடியாகக் காண்பிக்க முடியாது. விக்ரமை, கீர்த்தி சுரேஷ் ஒருதலையாகக் காதலிப்பதாகவும் காண்பிக்க முடியாது. காரணம், இதே கான்செப்ட்டைத்தான் ‘சிங்கம்-2’, ‘சிங்கம்-3’ படங்களில் பயன்படுத்தியுள்ளார் ஹரி. எனவே, அப்பா – மகன் என இரு வேடங்களில் விக்ரம் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

Summary:Vikram in two roles in the film 'Sami-2'The second part is the continuation of the first part. Vikram and Trisha have been reported to be part of the second part and it is now reported that
Keerthi Suresh is also actingVikram is likely to act in two roles as father and son

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.