சற்றுமுன்

ஐ.டி. வேலையை உதறிய  இளைஞர்களின் படத்தில் மாதவன்

சினிமா ஆசையில் 7 இளைஞர்கள் ஐ.டி. வேலையை உதறிவிட்டு, தாங்களே ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கத் திட்டமிட்டுள்ளனர். அவர்கள் மாதவனிடம் கதை சொல்லியிருக்கிறார்கள். மிகப்பெரிய இயக்குநர்கள் கதை சொன்னாலே, ‘அது சரியில்லை… இது சரியில்லை…’ என்று சொல்லி இழுத்தடிக்கும் மாதவன், இந்தக் கதையைக் கேட்டதும் உடனே ஓகே சொல்லிவிட்டாராம். அவர் அப்படிச் சொல்ல இன்னொரு காரணமும் இருக்கிறது. ‘நண்பன்’ படத்தில் என்ஜினீயர் வேலைக்குப் போகுமாறு அப்பா சொல்ல, ‘எனக்கு ஃபோட்டோகிராபி தான் பிடித்திருக்கிறது’ என்று சொல்வார் ஸ்ரீகாந்த். அதேபோல் தான் நாங்களும் பிடித்த வேலையை செய்ய வந்திருக்கிறோம் என்று அவர்கள் சொல்ல, மாதவனும் மகிழ்ச்சியுடன் ஓகே சொல்லிவிட்டாராம்.

summarry :7 youngsters in cinema They are planning to make a picture of themselves, dismissing the job.Similarly, they say we have come to do our favorite job, Madhavan also said happily.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.