சற்றுமுன்

வயதான மாடுகளுக்கு இறைச்சிக்கு விற்க தடையில்லை

கோழி, ஆடு இறைச்சிகள் சாப்பிடுவர்களை இறைச்சி சாப்பிடுங்கள் ஆனால் கொஞ்சம் வளர்ந்த பின் சாப்பிடுங்கள் குட்டியாகவோ, கோழிக்குஞ்சியாகவோ சாப்பிடாதீர்கள் என்று சட்டம் போட்டால் அரசாங்கம் எங்களை கோழி, ஆட்டு இறைச்சி சாப்பிடக்கூடாது என சொல்கிது என சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமான வாதமோ அது போன்றது தற்போது மாட்டிறைச்சி தொடர்பான அக்கப்போர்கள்
ஆனால் கோழியோ, ஆடோ வெறும் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகிறது ஆனால் மாட்டின் பயன் அதிகம் குறிப்பாக பாசுவின் பயன் அதிகம் அதை கோமாத என...... சரி வேணாம் இந்துத்வா ஆரம்பிச்சி கைபர்போலன் கனவாய் வரைக்கும் டூர் போவிங்க

எளியமாக சொல்ல வேண்டுமெனில் எல்லோர்க்கும் தெரிந்ததே ஆனாலும் நினைவூட்டுகிறேன் சுயநலம் பிடித்த மனித ஜந்து பிறந்ததும் தாய்ப்பால் சரியாக சுரக்கவில்லை எனில் முதன்முதலில் மருத்துவரே பரிந்துரைப்பது பசும்பாலைத்தான் அந்த அளவு ஆரோக்கியம் மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

பசுமை புரட்சி என்ற பெயரிலும் மனிதனின் பேராசையாலும் ரசாயண பூச்சுமருந்துகள் பயர்களுக்கு பயன்படுத்தும் வரை நம் தாத்தா தலைமுறை வரை பயன்படுத்தியது மாட்டு சாணத்தை உரமாகத்தான்

பயிருக்கு மாட்டு சாணம் உரம் மாட்டிற்கு நெல் மணியை தாங்கிபிடிக்கும் வைக்கோல் உணவு, நெல்லை குத்தும் போது மீறும் தவிடு மாட்டிற்கான உணவு, எண்ணை வித்துக்களை அரைக்கும்போது கிடைத்த புண்ணாக்கு எச்சம் மாட்டிற்கான உணவு எவ்வளவு அழகான உணவு சங்கிலி பாருங்கள் ( தற்கால மாடன் இளைஞர்களுக்கு) அது போக மாட்டுசானத்தை வரட்டியாக பயன்படுத்தப்பட்டு அடுப்பு எரிக்க பயன்டுத்தப்படும், இவ்வாறு பல வகையான உதவிகளை செய்யும் பசுவிற்கு பொங்கலன்று மரியாதை செய்துதெய்வமாக வழிபட்டனர் நம் முன்னோர் இவை அனைத்தையும் நான் அனுபவித்தான்

இது போக ஹிந்து மதம் சம்பந்தபட்ட பலவற்றில் கோமாத தொடர்பு அதிகம் சானம் பிள்ளையாராகவும், கோடிகளை கொட்டி வீட்டை இழைத்தாலும் முதலில் மஹாலக்ஷமியான பசுவையே வீட்டிற்குள் கன்றுடன் போக வைப்பார்கள் ஹிந்து தெய்வ அபேஷங்களுக்கு பசும்பால் அத்தனை உகந்தது, பெரும்பாலான பெருமாள் கோவில்களில் காலையில் நடக்கும் சுப்ரபாத சேவையில் பச்சை பசும்பாலே நெய்வேத்தியம் செய்யப்படுகிறது
இதுபோன்ற என்னற்ற பயனை மானிட பதர்களுக்கு அளிக்கிறது பசு, சினிமாவில் கூட அண்ணாமலை படத்தில் பசுவின் பெருமையை பாடியிருப்பார்கள் ஆக இவைபோல் இன்னும் பல சிறப்புகள் மனிதர்கள் வளர்க்கும் எந்த ஒரு விலங்கினத்திற்கும் இல்லாத பல சிறப்புகள் பசுவிற்கு உண்டு

மற்ற விலங்குகள் மாமிசத்திற்காக மட்டுமே வளர்க்கப்படும் ஆனால் பசு மாமிசத்திற்காக மட்டுமே வளர்க்கப்படுபவை அல்ல
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பசுவதை கூடங்கள் அதிகரித்தன என்பது வரலாறு அதற்கு பின்னனியில் இருந்தது நமது கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் குறிப்பாக பசுக்கள் குறி வைத்து அழிக்கப்பட்டன
வெறும் சாதரன மாட்டிறைச்சி பிரச்சனை மட்டுமல்ல இது அதையும் தாண்டி கலச்சார தாக்குதல் எளிமை புரிதலுக்கு நம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த பசும்பால் கிடைக்க கூடாத என்பதற்கான சர்வதேச சதி
என் தட்டு என் உரிமை நான் என்ன சாப்பிட வேண்டும் என்பதை அரசாங்கம் தடுக்க முடியாது என சொல்ல எவ்வளவு உரிமை உள்ளதோ அதேபோல் நம் அடுத்த தலைமுறையினருக்கு ஊட்டச்சத்து மிகுந்த பசும்பாலை விட்டு செல்ல நமக்கு தார்மீக கடைமையும் இருக்கிறது
சரி தற்போதைய அரசு அறிவிப்பு என்ன சொல்கிறது

* சந்தைகளில் இறைச்சிக்கா மாடுகளை விற்க கூடாது 10 ஆண்டுகள் வயதான மாடுகளுக்கு இறைச்சிக்கு விற்க தடையில்லை
* மாட்டு பண்ணைகளில் நேராக இறைச்சி வியாபாரி வாங்கி கொள்ள தடையில்லை

எனில் சாராம்சம் இதுதான்
சிறிய, சிறிய கன்று குட்டிகளை அறுத்து உண்ணுவதன் மூலம் பசுமாட்டினம் வேகமாக அழியும் ஆபத்து அதற்காகவே இந்த அறிவிப்பு இது பசுவிற்கு மட்டுமல்ல ஆடு கோழி போன்றவற்றிற்கு இயல்பாகவே பொருந்தும்
ஞாயிற்று கிழமை தோறும் கோழி இறைச்சி சாப்பிடுவதன் மூலம் நாட்டு கோழி இனமே கிட்டதட்ட இல்லாத நிலை பிராய்லர் கோழி தான் 15 நாட்களில் ஊசி மூலம் கறி ஆக்குகிறார்கள் இதன் ஆபத்து நமக்கு தெரியாததல்ல

இந்தநிலை நாளை பசுக்கு வரலாம் ப்ராய்லர் பசுவெறும் மாமிசத்திற்காக மட்டுமே பசுக்களை வளர்க்கும் அவல நிலை வரலாம் அதற்குள் நாம் அந்த இனத்தை காக்க வேண்டாம??

இதே அறிவிப்பு மீனவர்கள் விவகாரத்தில் பொருந்தும் இரட்டை மடி, இழுவலைகள் மூலம் மீன் பிடிக்க கூடது என்பது சர்வதே விதி காரணம் இந்த வலைகள் சிறு, சிறு மீன்கள் அகப்பட்டு மீன் இனவிரித்தி ஆகாமல் சீக்கிரம் அழிந்து விடும் என்பதால் இந்த விதி இந்த விதியால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற வாதம் எவ்வளவு முட்டாள்தமானதோ அதைபோலத்தான் இறைச்சிக்காக சிறுசிறு கன்றுகுட்டிகளை வெட்டாதீர் பாசுவை 10 ஆண்டுகள் கழித்து என்ன செய்யனமோ செய்து கொள்ளுங்கள் என்பது அரசு மாட்டிறைச்சியை உண்ணக் கூடாது என எங்கையும் சொல்லவில்லை, உன்னக்கூடாது என தடுக்கவும் இல்லை
21 வயதில் பெண்ணிற்கு திருமண வயது என மத்திய அரசாங்கம் நிர்னயித்தால் என் பெண்ணின் கல்யாணத்தை மத்திய அரசு தடுக்கிறது என எப்படி சொல்ல முடியும்

இப்போ நாட்ல பல பேர் இப்படித்தான் பேசிட்டு திரியிறான்
இவங்க பிரச்சனை மாட்டிறைச்சியல்ல மோடி, பாஜக

- பாவை வெங்கடேசன்

Do not cut small calves for meat If you do not do what you can do after 10 years, the government does not tell us not to eat beef, The problem is not Modi, the BJParuns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.