சற்றுமுன்

ஓம் என்ற ஓலியின் விஞ்ஞான இரகசியம்

ஓம் என்ற ஒலி முறையான அதிர்வுடன் உச்சரிக்கப்பட்டால் மட்டுமே பலன் கொடுக்கும். எனவே அவரவர்கள் தங்கள் சுயபரிசோதனை மூலமோ அல்லது குருவிடமோ கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்

ஓங்கார ஒலி, பிரபஞ்சத்தின் மூல சப்தம். அது அண்டத்திலும் உள்ளது, பிண்டத்திலும் உள்ளது. மேலும் பல மந்திர ஒலிகளும் இது போல விண்வெளியில் பரவியுள்ளது என்றும் அதை யோக சாதனை செய்வதன் மூலமே கேட்க முடியும் என்று சித்தர்களின் பாடல்கள் தெரிவிக்கிறது. நாம் வாயால் உச்சரிக்கும் ஒலிகள் எப்படி இருக்கிறது என்றால் சினிமா பாடகி ஜானகியின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொல்வதற்கும் தேன் இனிப்பாக உள்ளது என்று சொல்வதற்கும் எவ்வாறு ஒற்றுமையும் வேற்றுமையும் உள்ளதோ அது போலவே வெளியில் ஒலிக்க கூடிய மந்திரங்களும் இருக்கிறது.

வேதங்கள் கூறுவது என்னவெனில் ஓம் என்ற ஒலியிலிருந்தே பிரபஞ்சம் உண்டாகி விரிவடைந்து கொண்டு செல்கிறது. அது ஒவ்வொரு அணுவிலும் சக்தியாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது.

அந்த ஒலியை உணர வேண்டுமெனில் மனிதன் தன் ஐம் புலன்களையும் கடந்த நிலைக்கு செல்ல வேண்டும். அது யோக சாதனைகளால் மட்டுமே முடியும்.

அதற்கான விஞ்ஞான விளக்கத்தை பார்ப்போம்.
மனிதன் தன் காதுகளால் உணர கூடிய ஒலி அலைகளின் எல்லையை விஞ்ஞானம் ஏற்கனவே கண்டறிந்துள்ளது. அதாவது 20 Hz என்பது ஒரு துகள் ஒரு நொடிக்கு இருபது முறை அதிர்வதால் உண்டாகும் ஒலியின் நிலையாகும். இவ்வாறு ஒரு நொடிக்கு 20 Hz முதல் 20,000 Hz வரை அதிரக்கூடிய துகளின் ஒலி அலைகளை மட்டுமே மனித காதுகளால் கேட்க முடியும். விலங்குகள் மற்றும் பறவைகள் இதில் விதிவிலக்காக இருக்கிறது. அது பிரபஞ்சத்தில் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடுத்த வரப்பிரசாதமாகவே கருதலாம். ஏனென்றால் அந்த ஓங்கார ஒலியை கேட்டு உணர கூடிய உயிரணங்களே தன்னிலிருந்து இன்னொரு நிலைக்கு பரிமாற்றம் அடைய முடியும்.

விலங்குகளும் பறவைகளும் நம்மை போல் தியானம் யோகபயிற்சியெல்லாம் செய்வதில்லை, இயற்கை சீற்றம் பூகம்பம் போன்றவை வருவதற்கு முன்பே அதை உணர்ந்து கொண்டு அதன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக இயற்கை கொடுத்த வரமாகவே கருதலாம். அதனால்தான் பூகம்பம் வருவதற்கு முன்பே சுற்று புற ஒலி அலைகளில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்து பறவைகள் சிதறி பறந்தோடுகிறது. நாய்கள் குரைக்கிறது மாடுகள் மற்றும் பல விலங்குகள் மிரண்டு ஓடுகின்றன மழை வரும் முன்பே தும்பி என்ற தட்டான் பூச்சி கூட்டமாக பறக்கிறது தவளைகள் கத்துகின்றன மனித இனம் மட்டும் இந்த விஷயத்தில் செவிடாகவே உள்ளது. ஏனென்றால் மனிதர்களால் 20 Hz கீழே உள்ள ஒலி அலைகளை உணர முடிவதில்லை.

ஏனென்றால் விண்ணிலிருந்து வரக்கூடிய ஒலி மற்றும் பூமியின் காந்த விசை ஒலி பூமி சுழலும் ஒலி ஆகியவை ஒன்றுக்குள் ஒன்று மோதி கலந்து மீண்டும் பூமியின் தரையில் மோதும்போது அதன் ஒலி அளவு ஏறக்குறைய 7.83Hz என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இது 20 Hz க்கும் கீழே உள்ளதால் நாம் கேட்க முடியாது. ஆனால் ஐம்புலன்களை கடந்த யோகிகளின் காதுகளில் அது ஒலிக்கும் அதையே நாதபிரம்ம ஒலி என் கூறுகிறார்கள் பிரபஞ்சம் மனிதனுக்கு விதித்த வரையறை எல்லைகளை யோகிகள் கடந்து விடுவதால் அவர்களால் உணர முடியாத விஷயம் என்று எதுவும் இல்லை செய்ய முடியாத காரியம் என்று எதுவும் இல்லை காற்றிலே பறக்கவும் நீரிலே நடக்கவும் அரூப நிலையை அடையவும் தொலைவில் நடக்கும் விஷயங்களை காணவும் உணரவும் வல்லவர்கள் ஆகிறார்கள் நீங்கள் மனதுக்குள் பேசும் ஒலி அலைகளும் அவர்களுக்கு கேட்கும் இங்கிருந்தபடி அண்டசராசரங்களில் ஏற்படும் மாற்றங்களை காண முடியும் ஒரு நொடியில் ஒளிவேகத்தையும் மிஞ்சிய நிலையில் பிரபஞ்சங்களை கடந்து செல்ல முடியும் இந்த உடலுக்கு விதிக்கப்பட்ட நிலைகளை கடந்த நிலைகளையே அஷ்டமா சித்திகள் என்ற அந்த நிலையை அடைந்த மனிதர்கள் சித்தராகிறார்கள்.

இந்த 20 Hz லிருந்து 20,000 Hz என்ற ஒலி அலைகளுக்கு அப்பாற்பட்ட நிலைகளில்தான் தேவ ரகசியங்கள் ஒளிந்துள்ளது அந்த நிலைகளில் இருப்பவர்கள்தான் சித்தர்கள், ரிஷிகள், ஞானிகள்.
இந்த ஓம் என்ற ஒலி தொடர்ந்து குறிப்பிட்ட அலைவரிசையில் உச்சரிக்கபடும்பொழுது ஒரு வாயு இந்த உடலுக்குள் உருவாகி நாடி நரம்பு இரத்தம் DNA மற்றும் அனைத்து கோடிக்கணக்கான உயிரணுவிலும் பரவுவதாக விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது அந்த வாயுவின் பெயர் NITRIC AXOID
இந்த Nitric axoid பற்றி விரிவாக அறிந்து கொண்டாள் சித்தரகசியங்களும் பிரபஞ்ச ரகசியங்களும் புரியும் எனவே அதுபற்றி விளக்கமாக பார்ப்போம்.
சித்தர்களும் ஞானிகளும் கூறியபடி இதயத்தின் துடிப்பாலும் இரத்த ஓட்டத்தாலும் நாடி நரம்புகளில் பிராணஓட்டம் ஓடுவதாலும் ஸோ ஹம் என்ற உள்சுவாசம் வெளி சுவாசத்தாலும் நாத விந்து கலப்பால் உண்டாகும் ஒளியாலும் ஓங்காரம் ஒலிப்பதாக பலவாறாக கூறியுள்ளார்கள் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் அண்டத்தில் உள்ளது எதுவோ அது பிண்டத்திலும் உள்ளது என வெளிப்படையாக சொல்லி வைத்தார்கள் ஆனால் அதில் பல அர்த்தங்கள் உள்ளது.

இந்த நைட்ரிக் ஆக்சைடு என்ற வாயு என்பது ஓம்ம்ம்ம்ம்ம்ம் என்றி இழுக்க படும்போது உண்டாகிறது என விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ம்ம்ம்ம்ம்ம்ம் என்ற அநுஸ்வாரம் முக்கியமாக பங்காற்றுகிறது ஓ என்பது ம் என்ற சப்தத்தை அழுத்தமாக ஒலிப்பதற்கு உந்து விசையாக Audio amplify போல செயல்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அப்பொழுதுதான் ம்ம்ம் என்ற அநுஸ்வரம் நீண்ட தொலைவுக்கு பயன்படும் ஆ ஊ ஓ என்ற எழுத்துக்கள் மட்டுமே நீண்ட தொலைவுகளுக்கு ஒலி அலைகளை கடத்தக்கூடியது அல்லது உந்தி தள்ள கூடியது
இன்று விஞ்ஞானிகள் கண்டறிந்த விஷயத்தை 7000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஒலைசுவடிகளில் எழுதி ஆவணபடுத்தியுள்ளார்கள்.

ஓம் என்ற ஒலி நம் உள் சுவாத்தின் போது அதிகமாக ஆக்ஸிஜன் மற்றும் பிராண சக்தி உள்ளிழுக்கப்பட்டு இரத்த மண்டலத்தில் கலந்து உடலின் உள்ளுறுப்புகளான இதயம் நுரையீரல் கல்லீரல் சிறுநீரகம் இனவிருத்தி சுரப்பிகள் நாடி நரம்புகள் மற்றும் பல ஹார்மோன்கள் ஆகியவற்றில் பாய்வதோடு நில்லாமல் சூட்சும உடலாகிய பிராண உடலிலும் சென்று நிறைகிறது. இதுவே வாசியோகம் சிவயோகம் இராஜயோகம் குண்டலினி யோகம் என்று பலவாறாக சொல்கிறோம்.

வேத கால ரிஷிகள் சித்தர்கள் உடலளவிலும் மனதளவிலும் சக்தி படைத்தவர்களாக இருந்துள்ளார்கள் மேலும் அவர்களுடைய பீனியல் பிட்யூட்டரி போன்ற சுரப்பிகள் பெரிய பாதாம் பருப்பு அளவுக்கு பெரியதாகவும் அல்லது சிறிய எலுமிச்சம் பழ அளவும் மற்றும் பெருநெல்லி அளவும் இருந்திருக்கலாம் என்றும் ஓலை சுவடிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் ஏனென்றால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் மிக பெரிய உருவங்களையும் (Gigantic size) மற்றும் பெரிய தலைப்பகுதியும் கொண்டிருந்தார்கள் எனவும் ஆவணங்கள் கூறுவதாக கண்டறியப்பட்டுள்ளது
மேலும் அவர்கள் உடலில் 12 இழை கொண்ட DNA முழு அளவில் செயல்பாட்டில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது சந்தேகம் உள்ளவர் 12 strand Nill junk DNA என்று கூகுளில் அப்புறமா தேடிப்பார்க்கவும்
தற்போது உள்ள மனித இனத்திற்கு இரண்டு இழை கொண்ட DNA மட்டுமே செயல்பாட்டில் உள்ளது அதாவது இரண்டு இழை கொண்ட ஒரு ஜோடி DNA என்று கவனத்தில் கொள்ளவும் மீதி உள்ள 10 இழை கொண்ட 5 ஜோடி DNA குப்பையாக உள்ளது அதில் உள்ள தகவல்களை கண்டறிய முடியவில்லை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் அந்த 5 ஜோடி DNA பயன்பாட்டில் இல்லாததால் விஞ்ஞான உலகம் அதை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை எனவே மருத்துவ ஆவணங்கள் ஒரு ஜோடி DNA வில் உள்ள தகவல்களை மட்டுமே கூறி வந்ததால் நாமும் ஒரு ஜோடி DNA மட்டும்தான் நமக்கு உள்ளது என நம்பி கொண்டிருக்கிறோம்

யோகிகளும் ரிஷிகளும் இந்த ஆறு ஜோடி (12 இழை) DNA க்களை activation செய்து ஐம்புலன்களை வென்று மனித உடலுக்கு விதிக்கப்பட்ட எல்லைகளை கடந்து விடுகிறார்கள் இந்த ஆறு ஜோடி DNA வின் சக்தி என்பது சுழுமுனையில் ஒருங்கினைந்து பீனியல் சுரப்பியில் வெளிப்படும்போது ஆறுமுக கடவுளாக வெளிப்படுகிறது யந்திர தகடுகளில் வரையப்படும் ஆறு முக முக்கோணம் இந்த DNA வைதான் குறிக்கிறது ஆறுமுகனுக்கு 12 கரங்கள் இடகலை பிங்கலை என்ற இரண்டு மனைவி மேலும அவர் கையில் முதுகு தண்டை குறிக்கும் வேல் மயில் வாகனம் குறிப்பாக மயில் வாகனம் ஏன் வைத்தார்கள் ? மயிலின் கழுத்தின் உள்ள நிறமும் DNA வில் வெளிப்படும் ஒளியும் ஒரே மாதிரி உள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள் அதாவது DNA என்பது Ultra violet photon என்ற ஒளியை வெளிப்படுத்துவதாக கூறுகிறார்கள் இது பற்றி அப்புறம் விளக்கமாக பார்ப்போம் இப்போ Nitric Oxide விஷயத்துக்கு வருவோம் இந்த வாயுவானது ஒரு செல் உயிரிகளின் தோற்றத்திற்கு அடிப்படையானது என்றும் மனித இனம் இவற்றிலிருந்தே புல்லாகி பூண்டாகி புழுவாகி மரமாகி பல்மிருகமாகி பாம்பாய் பறவையாய் தன் பரிணாம மாற்றத்தை அடைந்து மனித இனம் என்ற நிலையை அடைந்துள்ளது என விஞ்ஞானமும் கூறுகிறது சித்தர்களும் மறைபொருளாக கூறுகிறார்கள்

ஓம்ம்ம்ம் என்ற ஒலியை உள்முகமாக கேட்டு தியானம் செய்து வரும்போது Nitric Oxide உற்பத்தியாகி நாடி நரம்பு இரத்தம் ஆகியவற்றில் கலக்கிறது இதனால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் அமிர்தமாக சுரக்கிறது அதுவே பேரானந்தம் நித்யானந்தம் சச்சிதானந்தம் பேரின்பம் என்று அழைக்கப்படுகிறது அமிர்தம் என்பது சுத்திகரிக்கப்ட்ட கபம் என்று ஒரு வாசியோக நூல் கூறுகிறது அதனுடன் பல ஹார்மோன்கள் சுரக்கும் திரவங்கள் கலந்த சுவையே பஞ்சாமிர்தம் என பல யோகிகளும் ஞானிகளும் கூறியுள்ளார்கள் அந்த கலவையில் ஒன்றுதான் இந்த Nitric oxide மேலும் தற்போதைய விஞ்ஞானத்தில் இந்த Nitric oxide வாயுவை சிரிப்பூட்டும் வாயு Luffing gas என கூறுகிறார்கள் அதாவது இந்த வாயுவை ஒருவர் முகத்தில் Spray செய்தால் அவர் சிரித்து கொண்டே மகிழ்ச்சியில் ஆனந்தத்தில் இருப்பார் அப்படிப்பட்ட வாயு உள்முகமாக கிடைக்கும்போது அதை அனுபவித்தவரின் நிலையையே பேரானந்தம் என கூறப்படுகிறது இப்ப பல உண்மைகள் உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகிறேன்
மேலும் இந்த Nitric Oxide செய்ய கூடிய நற்பலன்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது அவற்றை பார்ப்போம்
இந்த வாயுவானது நம் உடலில் உள்ள 50 டிரில்லியன் உயிரணுக்கள் தங்களுக்கு இடையேயான தகவல்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது
நரம்பு மண்டலம் மூளை மற்றும் ஹார்மோன்கள் அவற்றின் DNA அணுக்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளைகளையும் தங்களுக்குள் இருக்கும் நினைவுதிறன்களும் அழிந்து போகாமல் இருக்க பாதுகாக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியாகிய Immune system மேம்படுத்தபடுகிறது பாக்டீரியா மற்றும் நோய் தொற்று கிருமிகளிடம் போரிடுகிறது Brain tumer என்ற மாளை கட்டி வராமல் காக்கிறது

இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் மூட்டு எலும்பு தேய்மானம் ஏற்படுவதையும் தடுக்கிறது

தசை மண்டலத்தில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது
ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கிறது ஐம்புலன்களின் செயல்பாடுகள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்கிறது

உடலுக்கு சக்தியையும் வலிமையும் ஆரோக்கியத்தையும் கொடுக்கிறது இந்த உடலே காயகற்பமாக மாறுகிறது சித்தர்கள் கண்ட ரகசியம் இதுதான்.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.