சற்றுமுன்

சிங்கம்-3’ தோல்விப் படமா?

ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடித்த படம் ‘சிங்கம்-3’. முன்பு வெளியான இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக இந்தப் படம் வெளிவந்தது. தமிழ்நாடு, அண்டை மாநிலங்கள், வெளிநாடு என இதுவரை மொத்தமாக 107 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. இதில், செலவுகள் போக தியேட்டர்கள் மூலம் கிடைத்த தொகை, 60 கோடி ரூபாய் தானாம்.

ஆனால், 90 கோடி ரூபாய்க்கு தியேட்டர் உரிமை விற்கப்பட்டது என்கிறார்கள். அப்படியானால், 30 கோடி ரூபாய் நஷ்டம். இத்தனைக்கும் ஏகப்பட்ட தியேட்டர்களைக் கையில் வைத்திருக்கும் ஞானவேல் ராஜா தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளர். ‘சிங்கம்-3’ ரிலீஸின்போது வேறெந்தப் படமும் ரிலீஸ் ஆகாமல் பார்த்துக் கொண்டவர், அதற்கடுத்த வாரமும் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாமல் தடுத்தார். அப்படியிருந்தும் குறைவான வசூலே ஆகியிருக்கிறது.

aruns MALAR TV tamil Designed by Templateism.com Copyright © 2014

Powered by Blogger.