சமுத்திரக்கனி இயக்கி, நடித்துள்ள படம் ‘தொண்டன்’. விக்ராந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாலா, டிரெய்லரைப் பார்த்தபிறகு வெகுவாகப் பாராட்டினார். ‘அவரின் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்’ என்று பாலா சொன்னதைக் கேட்டு, அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
காரணம், சும்மா யாரையுமே பாராட்ட மாட்டார் பாலா. அவர் பாராட்டினார் என்றால், நிச்சயம் அதில் விஷயம் இருக்கும். அவருடைய அடுத்த படத்தில் விக்ராந்த் நடிக்கலாம் என்கிறார்கள். விக்ரம், பாலா என பலரை பட்டை தீட்டியவர் பாலா. அந்த வரிசையில் விக்ராந்தும் இணைவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.