தமிழில் ‘மின்சார கனவு’ படத்தில் நடித்த கஜோல், பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் முக்கியமானவர். திருமணம், குழந்தை என நடிப்புக்கு பிரேக் விட்ட கஜோல், சில வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். “என்னால் அந்த கேரக்டரை சிறப்பாகச் செய்ய முடியுமா என்று யோசித்தேன்.
ஆனால், படக்குழுவினரின் ஊக்கத்தாலும், ஒத்துழைப்பாலும் நன்றாகச் செய்ய முடிந்தது. இந்தப் படத்தின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேம், அதுவும் குறிப்பாக தனுஷிடம். தமிழ்ப் படங்களில் நடிப்பது நன்றாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார் கஜோல்.