நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவியேற்றுள்ளார். இதுகுறித்து விஷாலின் நெருங்கிய நண்பரான ஆர்யாவிடம் கேட்டபோது, “தயாரிப்பாளர் சங்கத் தேர்தலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் ரொம்ப பக்கத்தில் வந்துவிட்டன.
கொஞ்சம் அவகாசம் கிடைத்திருந்தால், ஆர்.கே. நகரிலும் கூட்டணி போட்டு ஜெயித்திருப்போம். ஒருவர், இதைத்தான் செய்ய வேண்டும் என்ன வரைமுறை எதுவும் இல்லையே… விஷால் நடிக்க வரும்போது, நடிகர் சங்க செயலாளராவார் என நினைக்கவில்லை.
போகப்போக சூழ்நிலை புரிந்து செயல்பட்டோம். கையில் பதவி இருந்தால்தான் எதையாவது செய்ய முடியும். சும்மா இருந்தால் எதையுமே செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.